கல்லு குடித்த 5 பேர் பலி..!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரோபோட்டிக் கிராமத்தை சேர்ந்த 5 பேர் அந்த பகுதியில் விற்கப்பட்டு வந்த பணங்கல்லை குடித்துள்ளனர்.
சிறுது நேரத்தில் ஒவ்வொருவராக மயங்கிக் கீழே விழுந்த நிலையில் அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக கிராமப்புற சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு கந்தராஜா ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருந்தபோதிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சஞ்சயா, சுகிரிவா மற்றும் ஏசுகாபு ஆகியோரும் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காக்கிநாடா போலீசார் விற்பனை செய்யப்பட்ட கல்லை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.






