37 தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு சோனியாகாந்தி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் சமூகநீதி கொள்கையை முன்னெடுத்து இட ஒதுக்கீடு உள்ளிட்ட கொள்கையை பாதுகாக்க அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் குடியரசு தினத்தன்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அழைப்புவிடுத்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான சமூக நீதி கிடைத்த ஒன்றிணைந்து பாடுபட்டால் தான் உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.






