கொரோனா நெகட்டிவ் சான்றுடன் மீண்டும் ஆஜராவேன்: ராஜேந்திர பாலாஜி
கொரோனா நெகட்டிவ் சான்றுடன் விசாரணைக்கு ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விருதுநகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் ஆஜரானார்.
அப்போது கடந்த 23ஆம் தேதி தனக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார். பின்னர் கொரொனா இல்லை என சான்றிதழ் பெற்ற பின்பு விசாரணைக்கு ஆஜராக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து கொரொனா தொற்று இல்லை என்று வந்தபின் எப்பொழுது அழைத்தாலும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராவேன் என ராஜேந்திரபாலாஜி கடிதம் எழுதினார். அழைப்பு வரும் பொழுது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜியை அறிவுறுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





