--- --:--:-- --

பொறியியல் மாணவர்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் செமஸ்டர் தேர்வுகள்.!

1

அண்ணா பல்கலைகழகம் தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்திலிருந்த எழுதும் வகையில் வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.

 

அரியர் எழுதும் மாணவர்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளை தொடர்பு கொண்டு தேர்வுக்கான அனுமதி சீட்டை பெறலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. கூகுள் கிளாஸ் ரூம் அல்லது மின்னஞ்சல் வழியாக வினாத்தாள்கள் அனுப்பப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

 

பிஇ, பிடெக் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்குகிறது.

 

காலை, மாலை இருவேளைகளிலும் தேர்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon