--- --:--:-- --

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இரண்டு இளைஞர்கள்..!

5

சேலம் அருகே 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மாவட்டம் பெரிய சோரகை கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி தனியாக இருந்துள்ளார்.

 

அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாசன் விக்னேஷ் இருவரும் மது போதையில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போலீசார் கைது செய்தனர்.

 

தொடர்ந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தால் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon