மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை ..!
மத்திய அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது மாவட்டங்களில் மத்திய அரசு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு அறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் மக்கள் நலத்திட்டங்களை ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் அதனை இயக்கமாக மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




