ஜனவரி 23 இல் முழு முடக்கம் அறிவித்தது தமிழக அரசு..!
தமிழ்நாட்டில் கொரொனா பரவலை கட்டுபடுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமைகளில் முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக வரும் ஞாயிறன்று முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொற்றுகளை தடுக்கும் வகையில் ஜனவரி 23ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு நாளில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ரயில் நிலையங்கள், வெளியூர் பேருந்து நிலையங்களில் பயணிகளின் நலனுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய முழு ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி தற்போது தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






