--- --:--:-- --

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை..!

1

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

 

அந்த பகுதிகளில் கேரள அரசு வழக்கமாக ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் விடுமுறை விடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் விடுமுறை என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இதை சுட்டிக்காட்டி கேரள அரசுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 14ஆம் தேதி பொங்கல் விடுமுறை விடுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில் கேரள அரசு திருவனந்தபுரம், உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை என அறிவித்துள்ளது.

 

Right Menu Icon