பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்..!
நேபாளில் வரும் 17ஆம் தேதி முதல் மக்கள் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. உண்மைச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் நேபாளத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள் போன்ற பொது இடங்களுக்கு மக்கள் செல்ல தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நடைமுறை வரும் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.






