சுற்றுலா படகு மீது பாறை விழும் அதிர்ச்சிக் காட்சி..!
பிரேசில் நாட்டில் மினாஸிகிராய் மாகாணத்தில் சுற்றுலா படகு மீது பாறை விழுந்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மினாஸிகிராய் மாகாணத்தில் பர்னாஸ் ஏரியில் சுற்றுலா பயணிகள் சிலர் படகில் பயணம் செய்தனர்.
அப்பொழுது அங்கிருந்த குன்றின் ஒரு பகுதியில் இருந்த பெரிய பாறை ஒன்று திடீரென உடைந்து விழுந்தது. இதில் அந்த வழியே சென்ற படகின் மீது பாறை விழுந்துள்ளது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்துள்ளனர்.
தண்ணீரில் மூழ்கி மாயமான இருபது பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





