பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்யக் கோரி புகார்..!
பெண் சாமியாரான அன்னபூரணியை கைது செய்ய கோரி இந்து மக்கள் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களால் பெண் சாமியாரான அன்னபூரணி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதனிடையே அவர் தொடர்பான வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் பகிரப்பட்டு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த இந்து மக்கள் கட்சியினர் அன்னபூரணியை கைது செய்யக்கோரி மனு அளித்தனர். இந்துக்களின் நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை அன்னபூரணி அவதூறு செய்வதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





