--- --:--:-- --

தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் – மத்திய அரசு

1

ஓமிக்ரான் கொரொனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

 

இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளரை கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாகவும், கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வரும் நிலையில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த உள்ளூர் மட்டத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகள் பரிசீலனை செய்யலாம் என்றும் கூறியுள்ளார். தொற்றுப் பரவலை கருத்தில்கொண்டு தேவைப்பட்டால் மாவட்ட மாநில அளவில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon