--- --:--:-- --

தமிழகத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறிகள்..!

5

தமிழகத்தில் 97 பேருக்கு ஓமிக்ரான் தொற்று அறிகுறி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவ மனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி பிரிவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

 

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் மையமானது துறையின் வளர்ச்சிக்கும், பொது மக்களின் தேவைக்கு ஏற்ப மருத்துவ சேவை புரிவதற்காக ஆராய்ச்சிகள் மூலம் இந்திய முறை மருத்துவத்தினை மேம்படுத்தவும் உறுதுணையாக செயல்படும்.

 

இதை துவக்கி வைக்க வருகை புரிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 97 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும், நோய் பாதிப்பை உறுதிப்படுத்த மரபணு பகுப்பாய்வு முடிவுகள் தாமதமாக குறிப்பிட்டவர் மாநில சுகாதாரத்துறை சார்பில் பயன்பாட்டில் உள்ள மரபணு பகுப்பு ஆய்வு முடிவுகளை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon