17 வயது மாணவியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது..!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது மாணவியை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மணிமுத்து பாலா. இவர் ஜெயம்கொண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார்.
இதனிடையே மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி மணிபாலாவை கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.






