--- --:--:-- --

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா..!

4

ந்தியாவில் தினசரி கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து 6,317 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் நேற்று கொரொனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது.

 

இந்த நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து 6,317 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 58 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரொனாவில் இருந்து மீளும் 6 ஆயிரத்து 906 பேர் குணமடைந்துள்ளதால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 6 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது. கொரொனா தாக்குதலுக்கு மேலும் 318 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது.

 

Right Menu Icon