டிசம்பர் 16, 17 இல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு..!
டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்கு ஆதரவாக இதர வங்கி ஊழியர் சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டுள்ளதால் இரண்டு நாட்களுக்கு வங்கி பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கிகள், தனியார் மயமாக்கப்படுவதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தனியார் மயமாக்குவது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும், கிராம மக்களுக்கும் சுய உதவி குழுக்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் உள்ளிட்டவை மறுக்கப்படும் சூழலை ஏற்படுத்தும் என்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





