விபத்தில் சிக்கிய பிபின் ராவத் தண்ணீர் கேட்டார்..!
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து இருந்தபோது பிபின் ராவத் தன்னிடம் தண்ணீர் கேட்டதாகவும் சரிவான பகுதியில் அவர் சிக்கி இருந்ததால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை என்றும் விபத்தை நேரில் பார்த்த சிவகுமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்தை நேரில் பார்த்த சிவகுமார் நடந்து சென்ற பொழுது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொழுது மரங்களில் மோதிய நிலையில் ஹெலிகாப்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து ஹெலிகாப்டரில் இருந்து வெளியே இருந்த 3 பேர் உயிருடன் இருந்ததைக் கண்டதாகவும் அதில் ஒருவர் காப்பாற்றும்படி அழைத்து தண்ணீர் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறிது நேரத்தில் அவர் மீட்கப்பட்ட நிலையில் தன்னிடம் தண்ணீர் கேட்டது பிபின் ராவத் தான் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக சிவகுமார் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





