--- --:--:-- --

ஒரே நாளில் குழந்தையை பெற்றெடுத்த இரட்டை சகோதரிகள்..!

9

கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகள் பெற்றெடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

 

கேரள மாநிலம் கோட்டயம் அருகே முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரநாயர், அம்பிகா தம்பதியின் இரட்டை பெண் குழந்தைகள் ஆன ஸ்ரீப்ரியா, ஸ்ரீலக்ஷ்மி. இருவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி ஒரே மேடையில் திருமணம் நடந்தது.

 

இதனை தொடர்ந்து கர்ப்பமான சகோதரிகள் இருவரும் தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தைகள் பெற்றுக் கொண்டு திரும்பினர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட ஸ்ரீபிரியாவும் ஸ்ரீலக்ஷ்மி பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

 

ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon