--- --:--:-- --

காணாமல் போனதாக கூறப்பட்ட இளைஞர் குளத்தில் சடலமாக மீட்பு..!

7

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் கல்குவாரி குளத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட அரவிந் என்பவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த அரவிந்த் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் விசாரணை நடத்தி வந்த போலீசார் கிடைத்த தகவலின் பேரில் கீழப்புலியூர் கல்குவாரி குளத்தில் சோதனையிட்ட போது அவரின் சடலம் கிடைத்துள்ளது.

 

சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் அரவிந்த் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon