2015ல் நடந்த விபத்தில் நூலிழையில் தப்பிய பிபின் ராவத்
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார். 2015இல்லெப்டினன் ஜெனரல் ஆக பணியாற்றி வந்தவர் மூன்று ராணுவ உயர் அதிகாரிகளுடன் நாகாலாந்து மாநிலம் கான்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளனர்.
அந்த ஹெலிகாப்டர் தரையிலிருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பறந்த போது திடீரென எஞ்சின் செயல்பாடு நின்று போனது. இதனால் ஹெலிகாப்டர் வேகமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் சிறு காயங்களுடன் அதில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர்.
ஆனால் தற்போது நடந்த விபத்தில் உயிரிழந்தது நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





