--- --:--:-- --

தனியார் மருத்துவக் கல்லூரியில் 43 மாணவர்களுக்கு கொரொனா தொற்று..!

2

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்ற 43 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரிம்நகர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

 

அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பரிசோதனை மேற்கொண்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. அங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கொரொனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லு நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon