--- --:--:-- --

பேஸ்புக் மூலம் பழகி 34 லட்சம் மோசடி செய்த பெண் கைது..!

1

சென்னையை அடுத்த ஆவடியில் முகநூல் மூலம் பழகிய காவலர் உட்பட இருவரிடம் 34 லட்சம் ரூபாய்யை ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சிவகங்கை மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த பாரதிராஜா திருவொற்றியூரில் உள்ள கடற்படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் ஆவடியில் வசிக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

தான் மருத்துவர் எனக்கூறி அறிமுகமானவர் ஐஸ்வர்யா. பாரதிராஜாவை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். அதனை நம்பி பாரதிராஜா 14 லட்சம் ரூபாய் ஐஸ்வர்யாவிடம் கொடுத்ததாக தெரிகிறது.

 

இதற்கிடையே பாரதிராஜாவின் பெரியப்பா மகன் மகேந்திரனிடம் 20 லட்சம் ரூபாய், ஒரு தங்கச் சங்கிலி ஆகியவற்றை ஐஸ்வர்யா வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து பாரதிராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 

விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள ஐஸ்வர்யா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவரது கணவர் வேளாண் துறையில் பணியாற்றி வருவதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon