கர்நாடகாவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து புதிய கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் கொரொனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் வைரஸ் தடுப்பு முறைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கும் கர்நாடக அரசு மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவளை தடுப்பூசிகள் போட்டு இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
பள்ளி ,கல்லூரிகளில் வரும் ஜனவரி 15ஆம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளிவந்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியே வர அனுமதிக்கப் படுவார்கள் எனவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் :
கணவருடன் வீட்டில் நடந்த சண்டை.. வாகனத்தை தீயிட்டு கொளுத்திய மனைவி..!
3 நாள் சித்திரவதை.. கணவனை சங்கிலியால் கட்டி போட்ட மனைவி..!
மலை இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக்.. 3 பேருக்கு நடந்த சோகம்..!
மின்கம்பியை பிடித்த குழந்தை உயிரிழப்பு..!
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து..!
பொட்டலமாக தெருவில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை..!