--- --:--:-- --

4ம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யும்..!

4

வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்களில் நான்காம் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மத்திய வங்கக் கடலை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நான்காம் தேதி மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும், ஆறாம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon