--- --:--:-- --

இரவு நேரத்தில் விடாமல் ஒலித்து கொண்டிருந்த காலிங் பெல்..! அதிர்ச்சியடைந்த பெண்..!

2

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லியோன் ஜேம்ஸ் என்ற பெண். ஊரு உலகமே அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் நடு ராத்திரியில் தனியாக வீட்டில் யாரேனும் ஒருவர் மட்டும் இருக்கும் பொழுது விடாப்பிடியாக யாராவது காலிங்பெல்லை அடித்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்.

 

நிச்சயம் நேரம் செல்ல செல்ல பய உணர்வு தோன்ற தானே செய்யும்.அப்படித்தான் இங்கிலாந்தில் உள்ள பெண் தனது வீட்டு வாசலில் இரவு நேரத்தில் காலிங் பெல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தால் திகைத்துப் போய் இருக்கிறார்.

 

பின்னர் உடனடியாக அவரது சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது திரையில் வீட்டு கதவின் மேல் தவலும் மர்மமான தோற்றத்தை கண்டு மேலும் குழப்பமடைந்துள்ளார். ஒரு நட்சத்திர வடிவிலான மெல்லிய உயிரினம் சறுக்கிக் கொண்டே இருந்துள்ளது.

 

அந்த காட்சிகள் இணையவாசிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தி அந்த விசித்திரமான உயிரினம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைத்துள்ளது.

 

அந்தப் பெண்மணி கதவைத் திறந்து பார்த்தபோது தான் தெரிந்தது வந்திருந்த அழையா விருந்தாளி ஒரு இலை அட்டை பூச்சி என்று, அந்த இலை அட்டை பசரின் மீது ஒட்டிக் கொண்டு இருந்ததை பார்த்ததும் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. அதற்கான காரணம் இது தானா என எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon