--- --:--:-- --

தண்ணீர் பைப்புக்குள் வைக்கப்பட்ட பணம் ..! அதிரடி சோதனை ..!

7

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ஒருவர் வீட்டில் குழாயில் கட்டுகட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

கர்நாடக மாநிலத்தில் இரண்டு நாட்களாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அரசு அலுவலகம் மற்றும் அதிகாரிகள் வீடு என 15 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

 

அப்பொழுது பணம் எதுவும் கிடைக்கவில்லை. உடனே அவர்கள் பிளம்பரை வரவழைத்து அவர் வீட்டிற்கு செல்லும் குடிநீர் குழாயை உடைத்து பார்த்தபோது அதிலிருந்து கட்டுக்கட்டாக நோட்டுகள் வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon