போயஸ் கார்டன் வீடு தீபா மற்றும் தீபக்குக்கே சொந்தம் என உத்தரவு..!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு வேதா நிலையத்தையும் சொத்துக்களையும் அரசுடைமையாக்கப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்து தீபா, தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி சேஷசாயி இன்று தீர்ப்பளித்தார்.
அதில் வேதா நிலையத்தை கையகப்படுத்தியதையும் அரசுடைமையாக்கிய சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதி இழப்பீடாக உரிமையியல் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்ட 10 கோடியே 90 லட்சம் ரூபாயை அரசு திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வசூலிக்க வருமான வரித்துறை அறிவித்துள்ளது.






