--- --:--:-- --

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதி..!

1

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரொனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

 

லண்டன், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற நாடுகளில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் கட்டாயம் இரண்டு தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

 

ஒரு தடுப்பூசி மட்டுமே செலுத்தி இருந்தாலும், தடுப்பூசி செலுத்தாவிட்டாலும் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரொனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும், நெகட்டிவ் என்று சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon