அட கொடுமையே… “அதிகாரியை செருப்பால் அடிக்க அனுமதி கேட்டு” ஆட்சியரிடம் மனு அளித்த விநோதம்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சாமானிய மக்களில் ஒருவர், தன்னுடைய பணியை சரியாக செய்யாத அரசு அதிகாரியை செருப்பால் அடிக்க பரிந்துறை செய்திட மனு ஒன்றை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
பெரியக்களக்காட்டூர் வோளான்மை கூட்டுறவு கடன் வங்கியில் தபால் மூலம் தனக்கு சான்றிட்டு வழங்க கேட்டதற்கு வங்கி தலைவர் மற்றும் வங்கி செயலாளர் அதன் விவரம் அலுவலகத்தில் இல்லை என்று கூறியதால் அதிருப்தி அடைந்துள்ள சுந்தரவேலு.

அதனால் மக்கள் குறைத்தீர்க்கும் நாளன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். இது சம்மந்தப்பட்ட அதிகாரி யார் என்பது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் இது போன்ற தவறு செய்பவர்களுக்கு தகுந்த தண்டனையாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர்கள் அவர்களை செருப்பால் அடிக்க சட்ட அமைச்சகத்துக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் பரிந்துறை செய்ய மனு அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




