--- --:--:-- --

மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறிக்கு தடை…?

8

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை உண்ணக் கூடாது ஹலால் செய்யப்பட்ட இறைச்சியை மட்டும் சாப்பிட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

இந்திய அணியினர் பின்பற்ற வேண்டிய உணவு குறித்து மாடு, பன்றி இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இறைச்சி சாப்பிட விரும்புவோர் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி மட்டுமே சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

 

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தியா மதசார்பற்ற நாடு என்றும் உணவு விஷயத்தில் பிசிசிஐ எப்படி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon