கமலுக்கு கொரொனா..! இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப்போவது யார்..?
கமல்ஹாசனுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து பிக் பாஸ் சீசன் 5வை யார் நடத்துவார் என்ற கேள்வி உள்ளது.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவரான நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும் பரிசோதனை செய்து பார்த்ததில் கொரொனா தொற்று உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் தனிமைப்படுத்திகொண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் நடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.






