பாராசூட் கயிறு திடீரென அறுந்து கடலில் விழுந்த தம்பதி..!
இந்தியாவிற்கு சொந்தமான தியோ தீவில் சுற்றுலா சென்ற குஜராத்தி தம்பதியர் பாராசூட்டில் பறந்த போது திடீரென கயிறு அறுந்துவிட்டதால் கடலில் விழுந்தனர். நடுவானில் பறந்த போது கயிறு அறுபட்டு விபரீதமானது.
தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் தக்க நேரத்தில் கடலில் குதித்து தம்பதியை உயிருடன் மீட்டனர்.






