--- --:--:-- --

சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய நடிகர் நாக சுக்ரியா..!

3

தெலுங்கு பட உலகில் முன்னணி இளம் கதாநாயகனான நாக சுக்ரியா சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக சுக்ரியா தமிழ் திரைப்படத்திலும் சாய்பல்லவி உடன் இணைந்து நடித்து இருந்தார்.

 

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நாக சுக்ரியா பண்ணை வீட்டில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்ததையடுத்து அந்த பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

 

அப்போது அங்கு 24 பேருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த நாக சுக்ரியாவின் நெருங்கிய நண்பர் சம்பத் என்பவரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டத்தில் நாக சுக்ரியாவுக்கு நேரடி தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon