100 கோடி வசூல் செய்த டாக்டர் படம்..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் 100 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசுக்கு தயாரான நிலையில் கொரொனா பரவல் காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.
இந்நிலையில் கடந்த மாதம் டாக்டர் படம் வெளியாக இன்றுவரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் தற்போது 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.






