--- --:--:-- --

செய்தி தொலைக்காட்சியில் நேரலை ஆபாச வீடியோவால் அதிர்ந்து போன மக்கள்..!

11

செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளர் வானிலை அறிக்கை வாசித்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ஆபாச படம் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க வாழும் மக்கள் அன்றாடம் தங்களை சுற்றி நிகழும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள செய்தி தொலைக்காட்சி சேனல்களை பார்த்து வருகின்றனர்.

 

கொரொனாவின் கோரப்பிடியில் சிக்கிய பின்பு ஆன்லைன் ஊடகங்களின் பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. குழந்தைகளின் கல்வி அலுவலக கூட்டங்களும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் எல்லாவிதமான செய்திகளும் ஆன்லைன் ஊடகங்கள் வாயிலாக வேகமாக பரவ ஆரம்பித்து விட்டன.

 

இந்த நிலையில் அமெரிக்காவில் செய்தி சேனல் ஒன்றில் நடந்த ஒரு சம்பவம் விவாதத்திற்கு உள்ளாகி விட்டது.

 

அமெரிக்காவின் வாஷிங்டனில் கிரம் என்ற செய்தி தொலைக்காட்சியில் பெண் செய்தி தொடர்பாளர் ஒருவர் வானிலை அறிவிப்பு வழங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென ஒரு ஆபாச வீடியோ சுமார் 15 நொடிகளுக்கு திரையில் தோன்றியுள்ளது. இதை பார்த்த நாட்டு மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Right Menu Icon