ஆரம்ப கால கட்டத்தில் என்னை பலரும் கேலி செய்தனர் : அஸ்வின்
தனி இசை படங்களில் நடிக்கும் பொழுது ஆரம்ப கால கட்டத்தில் தன்னை பலரும் கேலி செய்ததாக நடிகர் அஸ்வின் தெரிவித்துள்ளார். அஸ்வின் நடித்து சமீபத்தில் வெளியான யாத்தி யாத்தி என்ற தனிஇசைப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆரம்பத்தில் தனிஇசைப் பாடல் வீடியோ எடுத்ததனை பலரும் கேலி செய்தனர் என்று கூறினார். ஆனால் தற்பொழுது இசை பாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.






