50 கோடிக்குமேல் வசூல் செய்த டாக்டர் படம்..!
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இதுவரை 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நெல்சன் திலிப்குமர் கூட்டணியில் கடந்த 9ஆம் நாள் வெளியாகி டாக்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
டாக்டர் படம் இதுவரை உலகம் முழுக்க 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சினிமாத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் தியேட்டர்களில் வெளியான படங்களில் அதிக வசூல் குவித்த 5 படங்களை டாக்டர் படம் ஒன்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.






