மாடியில் இருந்து 14 வயதான இரட்டை சகோதரர்கள் குதித்து தற்கொலை..!
அடுக்குமாடி குடியிருப்பின் 25 ஆவது மாடியில் இருந்து 14 வயதான இரட்டை சகோதரர்கள் விழுந்து இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காசியாபாத் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சத்தியநாராயணன், சூரியநாராயணன் என்ற அந்த இரட்டைப் பிறவி சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.
நள்ளிரவு ஒரு மணியளவில் அவர்கள் வசித்த இருபத்தி ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தாயும் சகோதரியும் சம்பவத்தின்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
நடந்தது கொலையா? விபத்தா? தற்கொலையா என போலீசார் விசாரித்து வரும் நிலையில் அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.






