இன்று ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா..!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா முதன்முறையாக இன்று ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்று சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையானார்.
அப்பொழுது அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார். திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். சசிகலாவின் இந்த திடீர் மாற்றம் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு திமுக அதிமுகவை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசி மூலம் பேசிய சசிகலா விரைவில் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் அதிமுக பொன்விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி சசிகலா இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல உள்ளார்.
காலை 10 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா முதலில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.







