திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு 60 கிலோ தங்கம் பரிசளித்த மணமகன்..!
சீனாவில் திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு 60 கிலோ தங்கத்தை மணமகன் பரிசளித்த சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது. பூபே மாகாணத்தில் நடந்த திருமணம் ஒன்றில் மணப்பெண் 60 கிலோ தங்கம் அணிந்த இந்த புகைப்படம் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமண நாளில் மனைவிக்கு பரிசளிக்க நினைத்த மணமகன் தலா ஒரு கிலோ எடை கொண்ட 60 கிலோ தங்கத்தை கொடுத்துள்ளார்.







