காபூலுக்கு விமான சேவை கிடையாது என அறிவித்தது பாகிஸ்தான்..!
ஆப்கானிஸ்தான் உடனான விமான போக்குவரத்தை நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் மட்டுமே விமானத்தை இயக்கியது.
இந்நிலையில் தாலிபன்கள் விமானிகள் மற்றும் பணியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் விமான பயண கட்டணத்தை குறைக்கும்படி நிர்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டியிருக்கும் பாகிஸ்தான் விமானம் செல்லாது என அறிவித்துள்ளார்.







