ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரி..!
திருப்பதி ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரியை மாதர் சங்கத்தினர் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரியும் துரை என்பவர் ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெண் ஊழியர்கள் மாதர் சங்கத்தில் புகார் அளித்தனர்.
மாதர் சங்கத்தினர் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







