வாக்குபெட்டியை தூக்கிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு..!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம், நெல்லை உட்பட 9 மாவட்டங்களிலும் காலை 7 மணி முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் வாக்குப்பதிவை ஊக்கப்படுத்தும் வகையில் வாக்களித்து விட்டு திரும்பும்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் வெற்றிலைபாக்கு, ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
நாகை மாவட்டம் அந்தண பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மது போதையில் இருந்த நபர் வாக்குப்பெட்டியை தூக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.






