--- --:--:-- --

நடிகை சஞ்சனா கல்ராணி மீது அளிக்கப்பட்டுள்ள புகார்..!

5

டிகை சஞ்சனா கல்ராணி மீது கார் ஓட்டுனர் ஒருவர் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். கொரோனா விதிமுறைகளில் காரில் ஏசி பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில் அதையும் மீறி சஞ்சனா ஏ‌சியை போடுமாறு கூறியதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

 

இதை கூறியதால் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கடத்தல் வழக்கு என கூறி புகார் அளிப்பேன் என மிரட்டல் விடுத்தார் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம் சஞ்சனா தரப்பில் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon