--- --:--:-- --

பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது..!

3

கேரளாவில் நவம்பர் 1ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது என்று கேரள கல்வித்துறை அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் தொடர்ந்து கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற ஒன்றாம் நாள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

 

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பான அறிவிப்புகள் அந்த மாநில அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மதிய உணவுக்கு அனுமதி இல்லை எனவும் ஒரு பெஞ்சில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மதிய உணவு வழங்கப்படமாட்டாது என கூறியுள்ள கல்வித்துறை அதற்கு உரிய தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Right Menu Icon