வேலை கிடைக்காததால் உணவிற்காக சிறைக்கு சென்ற இளைஞர்..!
கேரளாவில் வேலை கிடைக்காததால் உணவிற்காக சிறைக்கு சென்ற இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அய்யம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் வேலை கிடைக்காததால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்துள்ளார்.
இதில் மனமுடைந்த அவர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது கல் வீசியுள்ளார். இதனையடுத்து அவர் மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் காவல்துறையின் வாகனத்தின் மீது கல்லை வீசியுள்ளார்.
இளைஞர்கள் செயலால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். வேலை கிடைக்காததால் அவர் உணவின்றி தவித்த வந்ததும் சிறைக்கு சென்றால் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கல் வீசியது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






