தர்மபுரி மாவட்டத்தில் இன்று முதல்வர் சுற்றுப்பயணம்..!
தர்மபுரி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை மைய கட்டடத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
காலை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஊராட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழும் பரிசும் வழங்குகிறார்.
மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்குகிறார். காலை 10 மணிக்கு ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைபலம் என்ற இடத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர், திட்ட நீர் சுத்திகரிப்பு நீரேற்று நிலையம் மற்றும் காவிரி ஆற்றில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
பகல் 3 மணிக்கு வத்தல் மலையில் உள்ள மலைக்கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் மக்களிடம் முகஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.






