வேலை செய்து கொண்டே படித்தால் என்ன தவறு என கேட்ட சிறுவனுக்கு குவியும் பாராட்டு..!
வேலை செய்து கொண்டே படித்தால் என்ன தவறு என்று கேட்ட செய்தித்தாள் விநியோகிக்கும் மாணவரை தெலுங்கானா அமைச்சர் கே டி ராமாராவ் பெரிதும் பாராட்டி உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஜெயப்ரகாஷ் என்ற சிறுவன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.
இவர் தனது வீட்டின் பொருளாதார நிலையை அறிந்து சைக்கிளில் வீடு வீடாக சென்று செய்தித்தாள் விநியோகித்து வருகிறார். இதனை பார்த்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி படிக்கும் வயதில் ஏன் வேலை செய்கிறாய் என கேள்வி கேட்க அதற்கு அந்த சிறுவன் பேப்பர் போட்டால் என்ன தவறு என கேட்டார்.
படிக்கும்போதே கஷ்டப்படுகிறாயா என கேட்ட பொழுது இப்படி கஷ்டப்பட்டால் பெரிய ஆளாகி முன்னேறலாம் எனக்கூறிய அந்த சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதைப்பார்த்த அமைச்சர் கே டி ராமாராவ் சிறுவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.






