--- --:--:-- --

யுபிஎஸ்சி தேர்வு முடிவில் சுபம் குமார் முதலிடம்..!

5

யுபிஎஸ்சி யின் இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் மத்திய குடிமைப் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தத் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

முதல்நிலைத் தேர்வு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய பல்வேறு பெயர்களின் அடிப்படையில் 761 பேருக்கு குடிமைப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 545 ஆண்களும், 216 பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

 

இதில் பொதுப்பிரிவில் 263 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 279 பேரும், தாழ்த்தப்பட்டவர்கள் 122 பேரும், பழங்குடியினர் 61 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். யுபிஎஸ்சி தேர்வில் பட்டப்படிப்பை முடித்த சுபம் குமார் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

Right Menu Icon