--- --:--:-- --

கழிவறை வழியாக தப்பிச் சென்ற குற்றவாளியை 3 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்..!

13

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கழிவறை வழியாக தப்பிச் சென்ற குற்றவாளியை 3 மணி நேரத்தில் போலீசார் பிடித்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஃபி. கடந்த வாரம் வியாசர்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

அப்பொழுது அவருக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக மாஜிஸ்ட்ரேட் தெரிவித்ததால் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் பிரிவில் அனுமதிக்க கோரி நீதிபதி தெரிவித்திருந்தார்.

 

இதனடிப்படையில் கடந்த 4 நாட்களாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மதியம் கழிவறை வழியாக தப்பிச் சென்ற குற்றவாளியை 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon